நடிகர் ரோபோ சங்கர் காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் இன்று இரவு சுமார் 9 மணியளவில் மரணம் அடைந்தார் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தகவலின்படி, இன்று மதியம் 2 மணியளவில் ஷூட்டிங்கில் திடீரென மயக்கம் அடைந்த நிலையில், அவரை உடனடியாக சென்னையின் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், தொடர்ந்து ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இன்று இரவு 9 மணியளவில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரோபோ சங்கரின் திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், அவரை நேசிக்கும் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.