தீரன் பட பாணியில் கொலையா ? திருப்பூர் பல்லடம் அருகே பயங்கரம் தாய் தந்தை மகன் மூன்று பேரை கொலை செய்து தப்பிச்சென்ற கும்பல் அச்சத்தில் ஊர் மக்கள் போலீசார் வளைவீச்சு
திருப்பூர், பல்லடம் பொங்கலூர் ஊராட்சியில் நடந்த கொடூர கொலை சம்பவம் ஊரை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது . November 29 / By paari vijay / Madras Times செந்தில்குமார் (ஐடி தொழிலாளர்) தனது தாயார் அலமேலு மற்றும் தந்தை சிகாமணி விவசாய தோட்டத்தில் தனியாக வாழ்ந்து வந்தார். நேற்றிரவு, மூவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் கட்டையால் தாக்கிக் கொலை செய்துள்ளது. இந்தக் கொலை கொள்ளையர்களால் செய்யப்பட்டதா, பழிவாங்கலுக்கானதா என்று காவல்துறை டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். செந்தில்குமாரின் மனைவி கதறி அழுதபடி, காவல்துறையிடம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணி செந்தில்குமார் கோவையில் தனியாக வசித்து வந்தார். ஆனால், தனது பெற்றோருக்கு மாப்பிள்ளை உறவின் விவகாரத்தில் பேசுவதற்காக நேற்று இரவு வீடு வந்தார். அவர் வந்திருக்கும் சமயத்தில் இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தக் கும்பல் பணம் மற்றும் நகைகளைத் திருடியதா அல்லது வேறு காரணமா ...