க.மு.க.பி – ஒரு காதல் கதையின் புதிய கோணம்!
க.மு.க.பி – ஒரு காதல் கதையின் புதிய கோணம்!
"க.மு.க.பி" (கல்யாணத்திற்கு முன், கல்யாணத்திற்கு பின்) என்பது காதல், திருமணம், மற்றும் வாழ்க்கையின் மாற்றங்களை புதிய பார்வையில் அணுகும் திரைப்படமாக உருவாகியுள்ளது. புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கியுள்ள இந்த படத்தில், விக்னேஷ் ரவி, டி. எஸ். கே. சரண்யா ரவிச்சந்திரன், திவ்யதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
புஷ்பநாதன் ஆறுமுகம் V International நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஜி. எம். சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார், தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்துள்ளார், மற்றும் சிவராஜ் பரமேஸ்வரன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
ஏப்ரல் 4 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது "க.மு.க.பி", காதல் மற்றும் திருமண வாழ்க்கையின் உண்மையான சந்தோஷங்களையும் சவால்களையும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான முறையில் கூறும் திரைப்படமாக இருக்கும்.
காதலுக்கு முன்பு… திருமணத்திற்குப் பிறகு… வாழ்க்கை எப்படி மாறுகிறது? இதை திரையில் காண மறக்காதீர்கள்!


Comments
Post a Comment